புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் தாக்கல் செய்ய நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி கே.சி. வேணுகோபால், “இந்திய அரசியல் சாசனம் முழுமையாக ஒருதரப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும் கட்டத்தில் அவற்றின் உள்ளடக்கத்தை கேள்வி எழுப்ப முடியாது என்றும், அறிமுக கட்டத்தில் உள்ள குறைகள் குறித்து மட்டுமே கேள்வி எழுப்பலாம் என்றும் தெரிவித்தார். மேலும், விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு வலுவான பதில் அளிக்கும் என கூறினார்.
இந்த நேரத்தில், அமித்ஷா தொடர்ந்து குறுக்கீடு செய்து பேசியதாக கூறி, “வார்த்தைக்கு வார்த்தை குறுக்கீடு ஏன்?” என்று வேணுகோபால் கேள்வி எழுப்பினார்.
இதனால் அவையில் சிறிது நேரம் பதற்றமும் சலசலப்பும் ஏற்பட்டது.
