சென்னை: தமிழகத்தின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை இன்று (ஜூன் 16) மாலை 5.30 மணிக்கு நிதி அமைச்சர் மரியவில்சன் வெளியிடுகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்வில் வெளியிடப்படும் இந்த வெள்ளை அறிக்கையில், மாநிலத்தின் தற்போதைய நிதிநிலை, பல்வேறு துறைகளின் நிதி செயல்பாடுகள், அரசின் வருவாய் மற்றும் செலவின நிலை, மாநிலத்தின் கடன் சுமை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முந்தைய நிர்வாகத்தின் நிதி மேலாண்மை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் விவரங்களும் இந்த அறிக்கையில் இடம்பெறும் என கூறப்படுகிறது.
முன்னதாக, பதவியேற்பு விழாவில் தமிழகத்தின் நிதிநிலையை முழுமையாக ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, மாநிலத்தின் பொருளாதார நிலை குறித்த முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது.
இன்று மாலை வெளியாகும் இந்த வெள்ளை அறிக்கையின் மூலம், தமிழக அரசின் நிதி நிர்வாகம், கடன் நிலவரம் மற்றும் எதிர்கால நிதி திட்டங்கள் குறித்து விரிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
