மஸ்கட்: ஓமன் கடற்கரைக்கு அருகே கடலில் மூழ்கத் தொடங்கிய இந்தியக் கொடி ஏந்திய ‘விராட்-1’ கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளை அமெரிக்க கடற்படை பத்திரமாக மீட்டுள்ளது.
இந்தியக் கொடியுடன் பயணித்த விராட்-1 கப்பல், ஓமனின் ராஸ் அல் ஹத் நகருக்கு கிழக்கே சுமார் 80 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கடலில் மூழ்கத் தொடங்கியது. அப்போது கப்பலில் 14 இந்திய மாலுமிகள் இருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அவசர எச்சரிக்கை கிடைத்ததைத் தொடர்ந்து, மீட்புப் பணியில் ஈடுபடுமாறு ஓமன் அதிகாரிகள் அமெரிக்க கடற்படையிடம் உதவி கோரினர். இதையடுத்து, அமெரிக்காவின் P-8 கடல் ரோந்து விமானம் மற்றும் கடற்படை மீட்புக் கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டன.
தீவிர நடவடிக்கையின் மூலம் கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பல் மூழ்கியதற்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இந்த விபத்து தொடர்பாக ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியக் கொடியுடன் 14 இந்திய மாலுமிகளுடன் பயணித்த விராட்-1 கப்பல் விபத்தில் சிக்கியுள்ளதாக உறுதி செய்துள்ளது. மேலும், ஓமன் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்
