சென்னை: மக்களின் உயிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில், “நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?” என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன் என்று கூறிய முதல்வரின் கவனத்திற்கு, பிஞ்சுகளை இழந்து வேதனைப்படும் பெற்றோர்களின் அழுகுரல் இன்னும் கேட்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மாநிலத்தில் மக்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசு எப்போது தீர்வு காணும் என்றும், குற்றவாளிகள் அச்சமின்றி குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் வினவியுள்ளார்.
தொடர்ந்து, “சவாலும் சவடாலும் பேசியவர்கள் எப்போது ‘சைலண்ட் மோட்’ நிலையிலிருந்து வெளியே வருவார்கள்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக இருக்கும் சூழலில், நான் ஆறு மாதம் எதுவும் கேட்காமல் இருக்க வேண்டுமா? அல்லது திமுகவின் மிகப்பெரிய போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?” என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
