ராகுல் இருக்கும் இடமே உண்மையான காங்கிரஸ் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், உண்மையான காங்கிரஸ் எங்கள் பக்கம் இருப்பதாக கூறியிருந்தார். இந்த கருத்துக்கு தமிழக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்த மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பார்லிமென்ட் கூட்டம் முடிந்தவுடன் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு வருவார் என தெரிவித்தார். மேலும், அவருடன் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் பங்கேற்பார்கள் என கூறினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் ராகுல் இணைந்து பிரசாரம் செய்வது குறித்து இரு கட்சிகளின் தலைமையும் முடிவு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதுச்சேரியில் ராகுல் பிரசாரத்தில் ஸ்டாலின் பெயர் கூறப்படவில்லை என்றும், ஸ்டாலின் பிரசாரத்தில் ராகுல் பெயர் கூறப்படவில்லை என்றும் கூறி பாஜ முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை விமர்சனம் செய்தது குறித்து, அவர் சீட் கிடைக்காத விரக்தியில் பேசுகிறார் என பதிலளித்தார்.
மேலும், காங்கிரஸ் திமுகவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்து, சோனியா, ராகுல், பிரியங்கா இருக்கும் இடம்தான் உண்மையான காங்கிரஸ் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
