சென்னை: த.வெ.க. அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த அதிமுக அதிருப்தி அணியினருக்கு வாய்ப்புகள் குறைந்து வருவதாக வெளியாகும் தகவல்கள், அதிமுக பொதுச்செயலாளர் Edappadi K. Palaniswami-க்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சி.வி. சண்முகம் மற்றும் வேலுமணி தலைமையிலான அதிமுக அதிருப்தி அணியினருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புகள் குறைந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில், அதிருப்தி அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு Edappadi K. Palaniswami தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது, “அவர்களுக்கு எதுவும் கிடைக்காது என்று நான் முன்பே சொன்னேன். அவர்களை நம்பி சென்றால் இறுதியில் ஏமாற்றமே கிடைக்கும் என்றும் கூறியிருந்தேன்” என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், “என் பேச்சை கேட்டிருந்தால் கட்சிக்கு விசுவாசமாக இருந்தீர்கள் என்ற பெயர் கிடைத்திருக்கும். இப்போதும் தாமதமாகவில்லை; மீண்டும் நம்ம பக்கம் வந்து விடுங்கள்” என்றும் அவர் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிருப்தி அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது உறுதியானால், அவர்களில் பலர் மீண்டும் Edappadi K. Palaniswami அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
