உலக சந்தையை நிலைப்படுத்தவே ரஷ்யாவிடம் டீசல் வாங்குகிறோம்: டிரம்ப்
வாஷிங்டன்: அதிக விலையால் பாதிக்கப்பட்டுள்ள உலக சந்தையை நிலைப்படுத்தும் நோக்கில், ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து டீசல் வாங்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி செய்து வருவதாகவும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இறுதித் தீர்வை எட்ட உக்ரைனுடன் இணைந்து செயல்படுவதாகவும் கூறினார். மேலும், உக்ரைனுடன் உளவுத் தகவல்களையும் பகிர்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் இணைந்து போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முயற்சி செய்து வருவதாக டிரம்ப் குறிப்பிட்டார். இரு நாடுகளும் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகத் தாம் கருதினாலும், போர் நிறுத்தத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பதில் சிக்கல்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான பகைமை நிலவுவதால், போரை முடிவுக்குக் கொண்டுவருவது சவாலாக இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், அதிக விலையால் பாதிக்கப்பட்டுள்ள உலக சந்தையை நிலைப்படுத்துவதற்காகவே ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து டீசல் வாங்கும் முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறிய அவர், இந்த முடிவு அமெரிக்காவின் சொந்த நலனுக்காக எடுக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்தார்.
