ஜந்தர் மந்தரில் தடையை மீறிப் போராட்டம்: மூவருக்கு நீதிமன்றக் காவல்
புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அனுமதியின்றிப் போராட்டம் நடத்தியதாகக் கூறி கரப்பான்பூச்சி அமைப்பைச் சேர்ந்த மூவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு ஐந்து நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அண்மையில் ஜந்தர் மந்தரை அனுமதிக்கப்பட்ட போராட்டக் களங்களின் பட்டியலிலிருந்து நீக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், விதிக்கப்பட்ட தடையை மீறி ஜந்தர் மந்தருக்குள் நுழைந்து போராட்டம் நடத்தியதாக அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் மற்றும் அஜின்க்யா ஷிண்டே ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, அனுமதி நிபந்தனைகளை மீறியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், மூவருக்கும் ஐந்து நாள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டது.
