சென்னை: “தி.மு.க. அழிய வேண்டும் என்று நினைத்த பலர் இன்று அரசியலில் இருந்து மறைந்து விட்டனர்,” என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, நடிகர்கள் வடிவேலு, நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது வடிவேலு பேசியதாவது:
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு 73 வயது என்று சொல்ல முடியாது; அவர் 37 வயது இளைஞரைப் போல உற்சாகமாக செயல்படுகிறார்.
தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்று கூறியவர்கள் இன்று அரசியலில் காணாமல் போயுள்ளனர்.
தி.மு.க.க்கு தஞ்சாவூர் கோபுரம் போன்ற வலுவான வரலாறு உள்ளது. அதனால் தான் அந்தக் கட்சி உறுதியாக நிமிர்ந்து நிற்கிறது.
மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் மாதம் 5000 ரூபாய் வழங்கி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியூட்டும் செய்தியை அளித்துள்ளார்.
இந்த அறிவிப்பை கேட்டு தி.மு.க. அழிய வேண்டும் என்று கூறியவர்கள் அரசியலில் இருந்து மறைந்து விட்டனர்.
தி.மு.க.வும் ஸ்டாலினும் இருந்தால்தான் தமிழகத்துக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதல்வராக பதவியேற்பார்.
இதற்கான முடிவை மக்கள் ஏற்கனவே எடுத்துவிட்டனர்.
மீண்டும் முதல்வராகப் பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு இப்போதே என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
