சென்னை: ஊழல் செய்வதற்காகவே திட்டங்களை கொண்டு வந்து மக்களை அவதி அடையச் செய்யும் தீயசக்தி திமுகவை தமிழக மக்கள் விரட்டியடிப்பது உறுதி என பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான K. Annamalai தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் மருத்துவர் Tamilisai Soundararajan அவர்களுக்கு ஆதரவாக திங்கள்கிழமை மயிலாப்பூர் திருவள்ளுவர் சாலை, விசாலாட்சி தோட்டம், மந்தைவெளி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் 8,008 கொலைகள், 2,080 பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்ததே திமுக ஆட்சியின் ஒரே சாதனை என்று கூறினார்.
மேலும், தமிழகத்தின் தலைநகரமான சென்னையை “மூழ்கிக்கொண்டிருக்கும்” நகரமாக மாற்றியுள்ளதாகவும், மழைநீர் வடிகால் திட்டம் என்ற பெயரில் ரூ.4000 கோடி முறைகேடு செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். சென்னை மக்கள் அதிக வரி செலுத்தியும் சாலைகள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இன்றும் மோசமான நிலையில் உள்ளன என்பது வெட்கக்கேடு என தெரிவித்தார்.
கொள்ளையடிக்கவும், ஊழல் செய்யவும் மட்டுமே திட்டங்களை கொண்டு வந்து மக்களை அவதி அடையச் செய்யும் திமுகவை மக்கள் விரட்டியடிப்பது உறுதி எனவும், மாற்றத்தின் நம்பிக்கையாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் தமிழிசைக்கு தாமரைச் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
