இந்திய ராணுவத்தின் மருத்துவப் பிரிவில் பணியாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் கோபாலன் முரளிதரன், சிறப்பான சேவைக்காக வழங்கப்படும் அதி விஷிஸ்ட் சேவா பதக்கத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றார்.
ஜனாதிபதி மாளிகையில் ஜூன் 29 அன்று நடைபெற்ற பாதுகாப்புத் துறைக்கான சிறப்புச் சேவை விருதுகள் வழங்கும் விழாவில், ஆயுதப் படைகள் மற்றும் சீருடைப் பணியாளர்களின் சிறப்பான சேவையை பாராட்டும் வகையில் இந்த உயரிய விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், இந்திய ராணுவத்தின் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் கோபாலன் முரளிதரன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் நீரஜ் வர்ஷ்னி, பிரிகேட் ஆப் தி கார்ட்ஸ் பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஆதித்யா விக்ரம் சிங் ரதி மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் புனீத் அஹுஜா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
மேலும், வைஸ் அட்மிரல் ஏ.ஒய். சர்தேசாய், ஏர் மார்ஷல் தருண் சவுத்ரி மற்றும் சிக்னல்ஸ் பிரிவைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் ஹர்பிந்தர் சிங் வந்த்ரா ஆகியோருக்கும் அதி விஷிஸ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது.
பாதுகாப்புத் துறையில் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவை மற்றும் சிறப்பான பங்களிப்பை பாராட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த உயரிய விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
