ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள ஸ்டேட் நகரில் அமைந்துள்ள இளைஞர் மையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, சுமார் 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் ஸ்டேட் நகரில் உள்ள இளைஞர் மையத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. தகவல் கிடைத்தவுடன் போலீசாரும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. மேலும், பாதுகாப்பு காரணங்களால் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
