காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்றும், அதற்கான முடிவு மத்திய அரசின் கைகளில் இருப்பதாகவும் கர்நாடக முதல்வர் D. K. Shivakumar தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் திட்டத்தை கர்நாடக அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவகுமார், கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாக தமிழகம் இந்தத் திட்டத்தை எதிர்த்து வருவதாக கூறினார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளதாகவும், Cauvery Water Management Authority மற்றும் மத்திய அரசிடம் கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவு எடுப்பார்கள் என்றும், தற்போது இந்த விவகாரம் முழுமையாக மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழக அரசின் அனுமதி இந்தத் திட்டத்திற்கு அவசியமில்லை என்றும், தமிழகத்தில் எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மேகதாது திட்டத்திற்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை தொடரும் என்றும் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
