முதல்வர் விஜயின் பிறந்தநாளையொட்டி, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் மாதா சிலை மற்றும் “உலக சிந்தனை சிற்பி தந்தை பெரியார்” என்ற நூலை நினைவுப் பரிசாக வழங்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக அறநிலையத்துறை அமைச்சர்கள், முதல்வரை சந்திக்கும் போது கோவில் அல்லது துறை சார்ந்த நினைவுப் பொருட்களை பரிசாக வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கு மாறாக இந்த முறை வழங்கப்பட்ட பரிசுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, இந்த நடவடிக்கைக்கு சில ஹிந்து அமைப்புகள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
