மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற அரசு பள்ளி நிகழ்ச்சியில் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதனின் செயல்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவியுடன் அவர் நடந்து கொண்ட விதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தவெக சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் விஸ்வநாதன் முன்பு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும், உரையின்போது முதல்வர் விஜய் என்பதற்கு பதிலாக முதல்வர் ஸ்டாலின் என குறிப்பிட்டதும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவியருடன் உரையாடியபோது, அமர்ந்திருந்த மாணவியின் கால்களை அமைச்சர் தொட்டு வருடியதாகக் கூறப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் மாணவியிடம் மிகவும் நெருக்கமாக பேசியதாகவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
