பெரியார் அறிவுலக நூல் தேர்வுக் குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு!
கோவை: கோவை பெரியார் அறிவுலகத்திற்கு நூல்களைத் தேர்வு செய்த குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தக் குழுவில் மொத்தம் ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர்.
நூல் தேர்வுக் குழு உறுப்பினர்கள்
கோவை பெரியார் அறிவுலகத்திற்கான நூல்களைத் தேர்வு செய்த குழுவில் இடம்பெற்றவர்கள் விவரம்:
- முனைவர் ஜெயரஞ்சன் – மாநில திட்டக்குழு துணைத் தலைவர்.
- முனைவர் சுல்தான் அஹமத் இஸ்மாயில் – மாநில திட்டக்குழு உறுப்பினர்.
- முனைவர் அரசேந்திரன் – முதன்மை ஆசிரியர்.
- முனைவர் ராமு மணிவண்ணன் – பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்.
- முனைவர் ராஜன் – கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர்.
- முனைவர் முருகன் – ஆராய்ச்சித் துறை முதல்வர், பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்.
எப்போது அரசாணை வெளியிடப்பட்டது?
கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி, தமிழக அரசு இதுதொடர்பாக அரசாணை வெளியிட்டது.
அதன்படி, கோவை பெரியார் அறிவுலகம், திருச்சி காமராசர் அறிவுலகம், சேலம் பாரதிதாசன் அறிவுலகம், கடலூர் அஞ்சலை அம்மாள் அறிவுலகம், திருநெல்வேலி காயிதே மில்லத் அறிவுலகம் ஆகிய ஐந்து சிறப்பு நூலகங்களுக்கும் நூல்கள் மற்றும் மின்னூல்கள் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டது.
மேலும், புதிதாகத் தொடங்கப்பட்ட தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய ஆறு மாவட்டங்களில் அமையவுள்ள மாவட்ட மைய நூலகங்களுக்கும் நூல்கள் மற்றும் மின்னூல்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது.
பல்வேறு குழுக்கள் அமைக்க அரசாணை
நூல்களைக் கொள்முதல் செய்வதற்காக உயர்நிலைக் குழு, நூல் விலை பேச்சுவார்த்தைக் குழு, நூல் தேர்வுக் குழு மற்றும் நூல் பரிந்துரைக் குழு ஆகியவற்றை அமைத்துக்கொள்ள அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், நூலகங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப சாதனங்களைக் கொள்முதல் செய்வதற்குத் தொழில்நுட்பக் குழுவையும் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
