புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு; செங்கோட்டையனுக்கு வருவாய்த்துறை
தமிழக அரசின் புதிய அமைச்சரவை இலாகா பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் செங்கோட்டையன் வருவாய்த்துறைக்கு மாற்றப்பட்டதுடன், மரிய வில்சனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக அரசின் புதிய அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் நிதித்துறையில் இருந்து வருவாய்த்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும், மரிய வில்சனுக்கு நிதித்துறை, திட்டமிடல் மற்றும் வளர்ச்சி துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் விவரம் பின்வருமாறு:
- ஸ்ரீநாத் – மீன்வளத்துறை
- கமலி – கால்நடை பராமரிப்புத்துறை
- விஜயலட்சுமி – பால்வளத்துறை
- ரஞ்சித்குமார் – வனத்துறை
- வினோத் – வேளாண்மைத்துறை
- ராஜிவ் – சுற்றுச்சூழல் துறை
- ராஜ்குமார் – வீட்டு வசதி துறை
- காந்திராஜ் – கூட்டுறவுத்துறை
- மதன் ராஜா – சிறு, குறு தொழில்துறை
- ஜெகதீஸ்வரி – சமூக நலத்துறை
- ராஜேஷ்குமார் – சுற்றுலாத்துறை
- விஜய் பாலாஜி – கைத்தறித்துறை
- லோகேஷ் தமிழ்ச்செல்வன் – வணிக வரித்துறை
- விஜய் தமிழன் பார்த்திபன் – போக்குவரத்துத்துறை
- ரமேஷ் – அறநிலையத்துறை
- விஸ்வநாதன் – உயர்கல்வித்துறை
- குமார் – செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள்
- தென்னரசு – வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை
- சம்பத்குமார் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
- முகமது பர்வஸ் – தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை
- சரத்குமார் – மனிதவள மேம்பாட்டுத்துறை
- மரிய வில்சன் – நிதித்துறை, திட்டமிடல் மற்றும் வளர்ச்சி
- விக்னேஷ் – மதுவிலக்கு மற்றும் சுங்கத்துறை
இதற்கிடையில், புதிய அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பான பிரத்யேக வீடியோ தினமலர் யூடியூப் சேனல் மற்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
