சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. இதில் மொத்தமாக 95.20 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு கடந்த மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. தேர்வு முடிவுகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அரங்கில் இன்று வெளியிடப்பட்டன.
இந்தாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 8.27 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இதில் மாணவர்கள் 93.19 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகமாக உள்ளது.
மாவட்ட வாரியான முன்னிலை
மாநில அளவில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்:
- ஈரோடு – 98.87%
- சிவகங்கை – 98.05%
- திருநெல்வேலி – 97.84%
- கன்னியாகுமரி – 97.63%
- திருச்சி – 97.50%
பள்ளி வாரியான தேர்ச்சி விகிதம்
மொத்தம் 2,639 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 489 அரசு பள்ளிகளும் அடங்கும்.
- அரசுப் பள்ளிகள் – 92.16%
- அரசு உதவிப்பெறும் பள்ளிகள் – 96.14%
- தனியார் பள்ளிகள் – 98.72%
- இருபாலர் பள்ளிகள் – 95.30%
- பெண்கள் பள்ளிகள் – 97.08%
- ஆண்கள் பள்ளிகள் – 90.49%
100க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள்
- தமிழ் – 83 பேர்
- ஆங்கிலம் – 21 பேர்
- இயற்பியல் – 105 பேர்
- வேதியியல் – 632 பேர்
- கணிதம் – 732 பேர்
- உயிரியல் – 784 பேர்
- விலங்கியல் – 18 பேர்
- தாவரவியல் – 31 பேர்
- கணினி அறிவியல் – 6,945 பேர்
- வணிகவியல் – 683 பேர்
- கணக்குப் பதிவியல் – 1,946 பேர்
- பொருளியல் – 440 பேர்
கடந்த 5 ஆண்டுகளின் தேர்ச்சி விகிதம்
- 2026 – 95.20%
- 2025 – 95.03%
- 2024 – 94.56%
- 2023 – 94.03%
- 2022 – 93.76%
சிவகங்கை மாவட்டம் கடந்த ஆண்டு 6வது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு 98.05 சதவீத தேர்ச்சியுடன் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு 3வது இடம் பெற்ற திருப்பூர், இந்தாண்டு 97.03 சதவீத தேர்ச்சியுடன் 11வது இடத்தை பெற்றுள்ளது.
மேலும், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல் மே 13ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும், தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் ஜூன் 28 முதல் ஜூலை 7 வரை நடைபெறும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
