சென்னை: திமுக மற்றும் அதிமுக குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இரண்டு திராவிட கட்சிகள், வாழ்நாள் எதிரிகள், ஒரே இரவில் ஒன்றானார்கள். அது தமிழகத்திற்காக அல்ல; மதச்சார்பின்மைக்காகவும் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஒரே ஒரு மனிதன் விஜய்யை தடுக்கவே இந்த அரசியல் நகர்வு நடந்துள்ளது என்பதை காங்கிரஸ் தெளிவாக புரிந்துகொண்டு வெளியேறியது” என்றும் தெரிவித்துள்ளார்.
“ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் பி-டீமுடன் இணைந்துகொண்டு தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூற முடியாது” எனவும் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
அதேபோல், “நிலையான அரசு” என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்களது அதிகாரத்தை காப்பாற்ற பயன்படுத்தும் அரசியல் மொழி என்றும் அவர் கூறியுள்ளார்.
இறுதியாக, “காங்கிரஸ் சரியான முடிவாகவே வெளியேறியது. திமுக இன்று தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்துமா?” என்றும் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
