பிரதமர் மோடிக்கு நார்வேயின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
ஓஸ்லோ: பிரதமர் Narendra Modi-க்கு நார்வே நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டு அந்நாடு கவுரவித்துள்ளது.
பிரதமர் மோடியின் தலைமைத்திறன் மற்றும் சர்வதேச உறவுகளை வலுப்படுத்த எடுத்த முயற்சிகளை பாராட்டி, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது உயரிய விருதுகளை வழங்கி அவரை கௌரவித்து வருகின்றன.
ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிறகு Sweden சென்ற பிரதமர் மோடிக்கு, இருநாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தியதற்காக அந்நாட்டு உயரிய விருதான “ராயல் ஆர்டர் ஆப் தி போலார் ஸ்டார் – கமாண்டர் கிராண்ட் கிராஸ்” விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை Crown Princess Victoria வழங்கி கவுரவித்தார்.
அதனைத் தொடர்ந்து Norway சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு, நார்வே நாட்டின் மிக உயரிய விருதான “கிராண்ட் கிராஸ் ஆப் தி ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆப் மெரிட்” விருது வழங்கப்பட்டது.
இந்தியா – நார்வே உறவை வலுப்படுத்தியதற்காகவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தியதற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சர்வதேச அளவில் பிரதமர் மோடிக்கு கிடைத்த உயரிய விருதுகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விருது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “இந்த விருதை பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பெருமையை இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இது இந்தியா மற்றும் நார்வே இடையேயான நீடித்த நட்புறவின் அடையாளமாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “உலகளாவிய முன்னேற்றத்திற்கான இருநாடுகளின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் இந்த விருது பிரதிபலிக்கிறது,” என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
