சென்னை: தவெக ஆட்சியமைக்கும் விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாட்டை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், சட்டசபைத் தேர்தலில் எந்த அரசியல் கூட்டணிக்கும் அல்லது கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதன்மைக் கட்சியின் தலைவரை கவர்னர் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அந்தக் கட்சியின் தலைவர் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டசபைதான்; கவர்னர் மாளிகை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது அரசியல் விதியும் பாராளுமன்ற மரபும் மட்டுமல்லாமல், 1994 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பிலும் தெளிவாக கூறப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த அரசியல் நடைமுறையை விளக்கி வலியுறுத்திய தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை பாராட்டுவதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
