சென்னை: இபிஎஸ் மீண்டும் தமிழக முதல்வராக பதவி ஏற்பார் என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸை சந்தித்த பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், மக்கள் ஆதரவும் உணர்வும் தற்போது அதிமுகவுக்கே இருப்பதாக கூறினார்.
“எங்களுடைய கட்சியின் பொதுச்செயலாளர் மக்களுடைய தலைவர். அவர் நாட்டிற்கு நல்லதை செய்வார் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. மீண்டும் இபிஎஸ் முதல்வராக பொறுப்பேற்பார்” என்று தம்பிதுரை தெரிவித்தார்.
அதிமுக-திமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “அது குறித்து கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். கட்சியின் பொதுச்செயலாளர் நல்லாட்சி தருவார்” என்றார்.
திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சி அமைக்கலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் சூழலில், தம்பிதுரையின் இந்த பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
