சென்னை,
தமிழகப் பெண்கள் திமுக ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: அரசியலில் பெண்களுக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும். ஆனால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தடையாக இருந்ததாக குற்றம்சாட்டினார்.
பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்படாமல் இருப்பது வருத்தத்துக்குரியது என்றும், இதற்கான பதிலை தமிழக பெண்கள் தேர்தலில் அளிப்பார்கள் என்றும் கூறினார்.
மேலும், மகளிர் இடஒதுக்கீடு மூலம் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என்றும், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில், மக்களுக்கு சேவை செய்ய அதிக பிரதிநிதிகள் தேவையானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெண்கள் அரசியலில் முன்னேறுவது நாட்டின் முன்னேற்றத்திற்கும் முக்கியம் என்றும், பெண்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தமிழக அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடுகள் குறித்து அவர் விமர்சனம் மேற்கொண்டு, தேர்தலில் மக்கள் சரியான முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறினார்
