சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் என்று Election Commission of India அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற C. V. Shanmugam, தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக அந்த இடம் காலியாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த காலியிடத்திற்கான இடைத்தேர்தல் தொடர்பான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 1 ஆம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுவை திரும்பப் பெற ஜூன் 11 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு மேல் போட்டியிட்டால், ஜூன் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அதே நாளில் மாலை தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் Vijay தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதால், அந்த கட்சி ஆதரவு பெறும் வேட்பாளர் மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
தமிழ்நாடு மட்டுமின்றி, மகாராஷ்டிரத்திலும் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கும் ஜூன் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. Sunetra Ajit Pawar தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த இடம் காலியாகியுள்ளது.
மேலும், 10 மாநிலங்களில் பதவிக்காலம் முடிவடைய உள்ள 24 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கும் ஜூன் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
