ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து, அவரது பொதுச் சேவையையும், நாட்டின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பையும் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், துணிச்சல், எளிமை, பணிவு மற்றும் பொதுச் சேவையில் தளராத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் ஜனாதிபதி முர்முவின் வாழ்க்கைப் பயணம் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக பொதுவாழ்வில் சிறப்பான சேவையாற்றி வரும் அவர், குறிப்பாக பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றம் மற்றும் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
மேலும், இந்தியாவின் வளர்ச்சிக்கான அவரது உறுதியான அர்ப்பணிப்பு ஊக்கமளிப்பதாக இருப்பதாக தெரிவித்த பிரதமர், ஜனாதிபதி நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும் தொடர்ந்து நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்று வாழ்த்தினார்.
ஒடிசாவில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ஜனாதிபதியை நேரில் சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
