குஜராத்திடம் மோசமான தோல்வி; சென்னை அணியின் பிளே ஆப் கனவு முடிவு
ஆமதாபாத்: Chennai Super Kings அணி தனது கடைசி லீக் போட்டியில் Gujarat Titans அணியிடம் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் சென்னை அணியின் பிளே ஆப் கனவு முற்றிலும் முடிவுக்கு வந்தது.
ஆமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணிக்காக கேப்டன் Shubman Gill மற்றும் Sai Sudharsan தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
கில் ஆரம்பத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெறும் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்தனர். கில் 64 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய Jos Buttlerவும் அதிரடியாக விளையாடினார். சாய் சுதர்சன் மற்றும் பட்லர் இணைந்து சென்னை பந்துவீச்சை சிதறடித்தனர்.
சாய் சுதர்சன் 84 ரன்களில் அவுட்டானார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பட்லர் 27 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
சென்னை அணிக்காக முகேஷ் சவுத்ரி, ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் அன்ஷுல் கம்போஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
230 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய சென்னை அணிக்கு முதல் பந்திலேயே சாம்சன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து வந்த வீரர்களும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
சென்னை அணி 13.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக Shivam Dube 47 ரன்கள் எடுத்தார்.
89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத் அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இந்த தோல்வியால் 14 போட்டிகளில் 6 வெற்றிகள் மட்டுமே பெற்ற சென்னை அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
