பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, காங்கிரஸ் தலைவர் மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக பாஜக எம்.பி.க்கள் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர்.
ராஜ்யசபா விதி 188-ன் கீழ், பாஜகவைச் சேர்ந்த ஆறு எம்.பி.க்கள் இந்த நோட்டீஸை சமர்ப்பித்துள்ளனர். இதில், கார்கேவின் கருத்துகள் அவையின் விதிமுறைகளையும், உறுப்பினர்களின் உரிமைகளையும் மீறியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸை பெற்ற ராஜ்யசபா சபைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மேலதிக விசாரணைக்காக உரிமை மீறல் குழுவிற்கு அனுப்பியுள்ளார்.
ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையிலான உரிமை மீறல் குழு, கார்கே தெரிவித்த கருத்துகள் அவை விதிகளை மீறியுள்ளதா என்பதை ஆய்வு செய்து தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.
இந்த தகவலை ராஜ்யசபா செயலாளர் பி.சி. மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.
