டெஹ்ரான்: அமெரிக்கா விதித்த கடல் போக்குவரத்து தடைக்கு பதிலளிக்கும் வகையில், ஈரான் கணித ‘பார்முலா’ மூலம் வித்தியாசமான எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் Donald Trump, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்துக்கு தடை விதித்ததாக அறிவித்தார். அந்த வழியாக செல்லும் கப்பல்களிடம் இருந்து ஈரான் கட்டணம் வசூலிப்பதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஈரான் சபாநாயகர் Mohammad Bagher Ghalibaf, சமூக வலைதளத்தில் ஒரு ‘கணித பார்முலா’ மூலம் எச்சரிக்கை வெளியிட்டார்.
அவர் பகிர்ந்த பதிவில், வெள்ளை மாளிகை அருகிலுள்ள பெட்ரோல் விலை நிலவரத்தை காட்டி, “இப்போது இருக்கும் விலையை ரசித்து கொள்ளுங்கள். இந்த தடைக்கு பிறகு, இவ்விலையை ஏங்கிப் பார்க்க நேரிடும்” என குறிப்பிட்டார்.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் தடைகள் ஏற்பட்டால் ஏற்படும் விளைவுகளை கட்டங்களாக விளக்கும் பார்முலாவையும் வெளியிட்டார். அதன் படி, முதலில் கச்சா எண்ணெய் விலை உயரும், பின்னர் சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிக்கும், அதன் பின்னர் உணவுப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு போன்ற தொடர் தாக்கங்கள் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம், அமெரிக்காவில் பெட்ரோல் விலை அதிகரித்து, மக்கள் தற்போதைய விலையை கூட குறைவாக நினைக்கும் நிலை உருவாகும் என மறைமுகமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரான் சபாநாயகர் பொறியியல் பின்னணி கொண்டவர் என்பதால், இவ்வாறு ‘டெக்னிக்கல்’ முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளார் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
