சென்னை: University of Madras மீது எழுந்துள்ள ஜாதி பாகுபாடு மற்றும் விதிமுறை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்த தமிழக உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகத்தில், பேராசிரியர்கள் பதவி உயர்வு உள்ளிட்ட கல்விசார் நடவடிக்கைகளில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. மேலும், பட்டியலினத்தவர்களுக்கு எதிராக ஜாதி அடிப்படையிலான பாகுபாடு நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த புகார்கள் தொடர்பாக National Commission for Scheduled Castes அணுகப்பட்டது. இதையடுத்து, ஆணைய தலைவர் Kishor Makwana கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி பல்கலை வளாகத்தில் நேரடி விசாரணை மேற்கொண்டார்.
இதில், யு.ஜி.சி. விதிகளின்படி தேர்வுக்குழுவில் எஸ்.சி./எஸ்.டி. பிரதிநிதிகள் சேர்க்கப்படாதது, ஆசிரியர் மற்றும் பணியாளர் நியமனங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாதது, பிஎச்.டி. மற்றும் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டங்களில் விதிமுறைகள் மீறப்பட்டதாக கூறப்படும் புகார்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்நிலையில், குறிப்பாக பட்டியலினத்தவர்களுக்கு எதிரான நான்கு முக்கிய புகார்களை விரிவாக ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த குழுக்கள் தயாரிக்கும் அறிக்கைகள் தேசிய பட்டியலின ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும். அதன்பின், தவறு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
