ஆந்திர உள்ளாட்சித் தேர்தல்: 13 மாநகராட்சிகளிலும் தேஜ கூட்டணி முன்னிலை!
ஆந்திரப் பிரதேசத்தில் 13 மாநகராட்சிகள், 79 நகராட்சிகள் மற்றும் நகரப் பஞ்சாயத்துகளுக்கு நவம்பர் 1ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 62.16 சதவீத வாக்குகள் பதிவாகின. தெலுங்கு தேசம் தலைமையிலான தேஜ கூட்டணிக்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
மாநகராட்சித் தேர்தல்
13 மாநகராட்சிகளில் தெலுங்கு தேசம் கட்சி 10 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் போட்டியிட்டன.
மறுபுறம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 13 மாநகராட்சிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. வாக்குகள் 138 மையங்களில் நவம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு வருகின்றன.
நகராட்சிகள் மற்றும் நகரப் பஞ்சாயத்துகள்
நகரப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் தெலுங்கு தேசம் சார்பில் 49 பேரும், ஜனசேனா சார்பில் 17 பேரும், பாஜக சார்பில் 4 பேரும் போட்டியிட்டனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 70 இடங்களிலும் வேட்பாளர்களைக் களமிறக்கியது.
மொத்தம் 87 நகராட்சிகள் மற்றும் நகரப் பஞ்சாயத்துகளில் 17 இடங்களில் தலைவர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.
13 மாநகராட்சிகளிலும் தேஜ கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு
தற்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளின்படி, விசாகப்பட்டினம், விஜயநகரம், ஏலூரு, மச்சிலிப்பட்டினம், விஜயவாடா, குண்டூர், ஒங்கோல், நெல்லூர், சித்தூர், திருப்பதி, அனந்தபூர், கடப்பா மற்றும் கர்னூல் ஆகிய 13 மாநகராட்சிகளிலும் தேஜ கூட்டணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
