போலி வீடியோவைப் பகிர்ந்ததாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது போலீசார் வழக்குப்பதிவு
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் கச்சா எண்ணெய் கொள்முதல் குறித்து விமர்சிப்பது போன்ற போலியாகத் திருத்தப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது. இந்த வீடியோ போலியானது என்பதை மத்திய வெளியுறவு அமைச்சகமும் ரஷ்ய தூதரகமும் உறுதி செய்தன.
இந்நிலையில், அந்தப் போலி வீடியோவை உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தவறான தகவல்களைப் பரப்புதல், வதந்திகளை உருவாக்குதல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
