சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் எம்.பி. Karti Chidambaram அலுவலகத்தில் இருந்து ரூ.13.40 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியபோது, அங்கு இருந்த இருவர் அந்த பணத்தை அதிகாரிகளிடமிருந்து பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த கார்த்தியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
“உங்கள் அலுவலகத்தில் இருந்து லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது, அதற்கு என்ன விளக்கம்?” என்ற கேள்விக்கு, “என்னிடம் பணம் இல்லை; யாராவது பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்கிறேன்” என்று சமாளிக்கும் வகையில் பதில் அளித்த அவர், பின்னர் அங்கிருந்து விலகிச் சென்றார்.
