திரிபுரா மாநில காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அனுராக் தன்கர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு அவரது உடல் அகர்தலா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தகவலறிந்த திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
பணிநேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால், அதன் பின்னணி குறித்து மாநில அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1994-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சைச் சேர்ந்த அனுராக் தன்கர், பல முக்கிய சிபிஐ வழக்குகளை விசாரித்த அனுபவம் கொண்டவர். கடந்த 2025 மே மாதம் திரிபுரா மாநில டிஜிபியாக பொறுப்பேற்றிருந்த நிலையில், அவரது திடீர் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
