மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சிகளுக்கு அந்நாட்டு முக்கிய நாளிதழ்கள் விரிவான முக்கியத்துவம் அளித்து தலைப்புஷியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கான அரசுமுறை சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மெல்போர்னில் நடைபெற்ற இந்தியா–ஆஸ்திரேலியா மூன்றாவது உச்ச் செய்திகளாக வெளியிட்டுள்ளன.
இந்தோனேசி மாநாட்டில் அவர் பங்கேற்று, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸுடன் இருதரப்பு உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் தூய்மை எரிசக்தி இலக்கை முன்னேற்றும் வகையில் அணுமின் உற்பத்திக்குத் தேவையான யுரேனியத்தை நீண்டகால அடிப்படையில் வழங்குவதற்கான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தமும் இரு நாடுகளின் பிரதமர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.
பிரதமர் மோடியின் இந்த பயணத்தை ஆஸ்திரேலிய ஊடகங்கள் பரவலாக செய்தியாக வெளியிட்டுள்ளன. ஒரு முக்கிய நாளிதழ் தனது முதல் பக்கத்தில் “வர்த்தகம் மற்றும் பாதுகாப்புக்கான பரிசுகளுடன் மோடி வருகிறார்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது. மேலும், ஒரு கட்டுரையாளர் மோடியை “மிஸ்டர் இந்தியா” என்று குறிப்பிட்டு அவரது பயணத்தின் முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார்.
மற்றொரு முன்னணி ஆஸ்திரேலிய நாளிதழான ‘தி ஏஜ்’, “ALBANESE’S MODI OPERANDI” என்ற தலைப்பில் பிரதமர் மோடியின் பயணத்தை சிறப்பித்துள்ளது. இந்த தலைப்பு ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
