“ஒரு கோப்பைத் திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் கைது” – அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
கோவை: முதல்வர் விஜய் ஒரு கோப்பைத் திறந்து விசாரணைக்கு வழிவகுத்ததிலேயே முன்னாள் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பல கோப்புகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் குறித்தும் விளக்கமளித்தார். தப்பியோடியவர்களில் நான்கு பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 13 பேரைப் பிடிக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சிறையில் பாதுகாப்புக் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால், சிறைத்துறை டிஜிபி தலைமையில் ஆய்வு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், முதல்வர் விஜய்யின் மேசையில் இருந்த மூன்று கோப்புகளில் ஒரு கோப்பு திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் கோப்புகளைத் திறக்குமாறு சவால் விடுத்த நிலையில், ஒரு கோப்பு திறக்கப்பட்டதற்கே முன்னாள் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் பல கோப்புகள் விசாரணையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதில் ரூ.400 கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார். கட்சியின் நிதி திரட்டலில் ஊழல் நடந்ததாகக் கூறிய அவர், மகேஷ் தொடர்பான வழக்கை அதற்கு ஓர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.
மகேஷைக் காவலில் எடுத்து விசாரித்தால், மேலும் பலர் தைரியமாக முன்வந்து புகார் அளிப்பார்கள் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
