இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement – FTA) இன்று (ஜூலை 15) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மேலும் விரிவடையும் என்றும், இந்தியாவின் விவசாயிகள், மீனவர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கு புதிய ஏற்றுமதி வாய்ப்புகள் உருவாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் அமலுக்கு முன்பு, பதப்படுத்திய உணவுப் பொருட்கள், கடல்சார் பொருட்கள், பழங்கள், ஜவுளி, தோல் மற்றும் காலணி பொருட்கள், டீ, காபி, இயந்திரங்கள், மின்னணு உபகரணங்கள், நறுமணப் பொருட்கள், பிளாஸ்டிக், ரப்பர், சர்ஜிக்கல் கருவிகள், ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி உள்ளிட்ட பல பொருட்களுக்கு 4% முதல் 70% வரை ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு வந்தது.
ஆனால், புதிய வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்ததன் மூலம், இந்த அனைத்து பொருட்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த ஏற்றுமதி வரி தற்போது பூஜ்யமாக (Zero Tariff) மாற்றப்பட்டுள்ளது.
வரி நீக்கப்பட்ட முக்கிய பொருட்கள்:
- பதப்படுத்திய உணவுப் பொருட்கள்
- கடல்சார் பொருட்கள்
- பழங்கள்
- ஜவுளி
- தோல் மற்றும் காலணி
- டீ, காபி
- மின்னணு மற்றும் மின்சார இயந்திரங்கள்
- அலுமினியம்
- ரசாயனப் பொருட்கள்
- கனிமங்கள்
- இயந்திரங்கள்
- நறுமணப் பொருட்கள்
- எண்ணெய் வித்துக்கள்
- பிளாஸ்டிக், ரப்பர்
- சர்ஜிக்கல் கருவிகள்
- ஜெம்ஸ் & ஜூவல்லரி
- பர்னிச்சர் மற்றும் விளையாட்டுப் பொருட்கள்
இந்த வரி விலக்கு காரணமாக, இந்திய பொருட்களின் போட்டித்திறன் பிரிட்டன் சந்தையில் அதிகரிக்கும் என்றும், ஏற்றுமதி வளர்ச்சியுடன் வேலைவாய்ப்புகளும் முதலீடுகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
