இஸ்ரேலுக்கு அமெரிக்கா மட்டுமல்ல, இந்தியாவும் முக்கியமான நட்பு நாடாக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்–அமெரிக்கா உறவு குறித்து அண்மையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், “இஸ்ரேலுக்கு அமெரிக்காவைத் தவிர வலிமையான நட்பு நாடு வேறு இல்லை” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய நெதன்யாகு, “அமெரிக்க துணை அதிபர் வான்சை நான் மதிக்கிறேன். ஆனால், அவர் கூறும் அனைத்து கருத்துகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அமெரிக்காவுக்கு அப்பாலும் எங்களுக்கு பல நண்பர்கள் உள்ளனர். உதாரணமாக, 140 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவை குறிப்பிடலாம். அங்கு எங்களுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு உள்ளது. என் சமூக வலைதளப் பக்கங்களைப் பார்த்தாலே அதை உணர முடியும்” என்றார்.
அண்மைக் காலமாக இந்தியா–இஸ்ரேல் உறவுகள் பாதுகாப்பு, தொழில்நுட்பம், வேளாண்மை, புதுமை மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வலுப்பெற்று வருகின்றன. இந்த சூழலிலேயே நெதன்யாகுவின் இந்தக் கருத்து கவனம் பெற்றுள்ளது.
