ஒடிசா மாநிலத்தின் புரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவிலின் ஆண்டு ரத யாத்திரை இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து வந்த பக்தர்கள் காரணமாக, நகரம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், ரத யாத்திரை நடைபெற்றபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சுமார் 200 பேர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், பல பக்தர்களுக்கு கூட்ட நெரிசல் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை வழங்கினர். காயமடைந்தவர்களின் நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
