வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், அது 5.25 சதவீதமாகவே தொடரும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை நிர்ணயக் குழு (MPC) இரு மாதங்களுக்கு ஒருமுறை கூடுகிறது. அந்த வகையில், மூன்று நாள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறித்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வெளியிட்ட அறிவிப்பில், தற்போதைய 5.25 சதவீத ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், அதே விகிதம் தொடரும் என்றும் தெரிவித்தார்.
ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடர்வதால், வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதங்களிலும் உடனடி மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது.
