சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. அமைச்சர்களை குறிவைத்து “விடியல் அமைச்சர்களின் இருண்ட பக்கங்கள்” என்ற தலைப்பில் புதிய வீடியோ பிரசாரத்தை பா.ஜ. தொடங்கியுள்ளது.
இதனுடன், பா.ஜ. தேசிய தலைவர் நிதின் நபின் வரும் ஏப்ரல் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் தமிழகம் வருகை தந்து, பல்வேறு தொகுதிகளில் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
அவரது பயணத்தின் போது, மதுரை தெற்கு தொகுதியில் ராம சீனிவாசன், சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன், ராமநாதபுரத்தில் நாகேந்திரன், தஞ்சையில் முருகானந்தம், அறந்தாங்கியில் கவிதா ஸ்ரீகாந்த், கந்தர்வக்கோட்டையில் உதயகுமார் உள்ளிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பா.ஜ. சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், தி.மு.க. அமைச்சர்களின் அரசியல் பயணம், அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகள், வழக்குகள் மற்றும் சர்ச்சைகள் ஆகியவை தொகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக “தி.மு.க. பைல்ஸ்” என்ற பெயரில் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டு, அது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது “விடியல் அமைச்சர்களின் இருண்ட பக்கங்கள்” என்ற தொடரில் ஒவ்வொரு அமைச்சரையும் குறித்து தனித்தனியாக வீடியோக்கள் வெளியிடப்படுகின்றன.
முதற்கட்டமாக முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மற்ற அமைச்சர்களை பற்றிய வீடியோக்களும் வெளியாகும் என பா.ஜ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
