புதுக்கோட்டை: தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் மக்களின் ஆதரவை பார்க்கும்போது, 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபயிற்சி மேற்கொண்டு ஓட்டு சேகரித்த பின்னர் நிருபர்களிடம் அவர் பேசிய போது, தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ். தோல்வி மனநிலையில் உள்ளதால் விரக்தியுடன் பேசி வருகிறார் என்றும், அதைப் பற்றி தாங்கள் கவலைப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
யார் எதிராக போட்டியிட்டாலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை தோற்கடிக்க முடியாது என அவர் வலியுறுத்தினார்.
மேலும், அ.தி.மு.க. டெல்லியின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது என்றும், அவர்கள் சுயாதீனத்தை இழந்துவிட்டனர் என்றும் குற்றம்சாட்டினார்.
திராவிட அரசியல் இவ்வாறு பாதிக்கப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாகவும், அதே நேரத்தில் தாங்கள் தங்கள் பணிகளை தொடர்ந்து செய்து கொண்டு இருப்பதாகவும் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில் மக்களின் எழுச்சி தங்களுடன் இருப்பதால், 234 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
