பிரிட்டனின் லண்டன் நகருக்கு வடக்கே உள்ள பெட்போர்ட் பகுதியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி கடுமையான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தகவலின்படி, இரண்டு ரயில்களும் எதிரெதிர் திசையில் வேகமாக வந்தபோது மோதியதில், பயணிகள் பலர் முன்னோக்கி தூக்கி எறியப்பட்டனர். இதில் பலருக்கு எலும்பு முறிவு உள்ளிட்ட கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் 11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 22 பேர் பலத்த காயங்களுடனும், 56 பேர் லேசான காயங்களுடனும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர், மருத்துவக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து பிரிட்டன் போக்குவரத்து அமைச்சர் ஹைடி அலெக்சாண்டர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததுடன், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறினார். மேலும், விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் உறுதியளித்துள்ளார்.
