சென்னை: சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட Vijay, தனது கட்சியின் ‘விசில்’ சின்னத்தை கோலமாக வரைந்தது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது, வீட்டு வாசலில் விசில் சின்னத்தை கோலமாக வரையுமாறு பெண்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் வீடுகளின் முன்பு விசில் கோலங்களை வரைய தொடங்கினர்.
இந்த நிலையில், பெரம்பூரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த விஜய், நேரடியாக விசில் சின்னத்தை கோலமாக வரைந்தார். மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த கட்சி பணிமனையிலும் இதே சின்னத்தை கோலமாக உருவாக்கினார்.
இந்த நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி, அவரது ஆதரவாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
