புதுடெல்லி: தேர்தல் கால கண்காணிப்பின் போது, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பெருமளவில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக Election Commission of India தெரிவித்துள்ளது.
அதன்படி, தேர்தல் நேர்மையாக நடைபெறுவதற்காக தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் மொத்தம் 5,011 பறக்கும் படைகள் மற்றும் 5,363 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
பிப்ரவரி 26 முதல் ஏப்ரல் 17 வரை நடந்த சோதனைகளில், தமிழகத்தில் மட்டும் மொத்தம் ₹438 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில்:
- ரொக்கம் – ₹78 கோடி
- மதுபானம் – 97,107 லிட்டர் (₹3 கோடி மதிப்பு)
- போதைப்பொருட்கள் – ₹74 கோடி
- விலை உயர்ந்த பொருட்கள் – ₹105 கோடி
- இலவச பொருட்கள் – ₹350 கோடி
மேற்கு வங்கத்தில்:
- ரொக்கம் – ₹21 கோடி
- மதுபானம் – ₹81 கோடி மதிப்பு (31.94 லட்சம் லிட்டர்)
- போதைப்பொருட்கள் – ₹100 கோடி
- விலை உயர்ந்த பொருட்கள் – ₹54 கோடி
- இலவச பொருட்கள் – ₹172 கோடி
இதன் மூலம், இரு மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் ₹865 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
