புதுடில்லி: பிரதமர் Narendra Modiயை சந்தித்த பிறகு, தமிழக முதல்வர் Vijay தன்னுடன் தொலைபேசியில் பேசியதாக மத்திய அமைச்சர் Suresh Gopi தெரிவித்துள்ளார்.
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக டில்லி சென்ற விஜய், நேற்று பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் Nirmala Sitharaman ஆகியோரை சந்தித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தினார். தொடர்ந்து இன்று அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அவர், பின்னர் தமிழகம் திரும்பினார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஜய் என்னை தொலைபேசியில் அழைத்தார். நாங்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டோம். நாட்டின் முன்னேற்றம் மற்றும் தமிழகம், கேரளத்தின் வளர்ச்சிக்காக இணைந்து செயல்பட வேண்டும் என்ற உறுதிப்பாட்டை இருவரும் வெளிப்படுத்தினோம். ஒன்றிணைந்து வலிமை பெறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
