திருவனந்தபுரம்: பணப்பரிமாற்ற மோசடி வழக்கு தொடர்பாக கேரள முன்னாள் முதல்வர் Pinarayi Vijayan வீட்டில் உள்ளிட்ட 12 இடங்களில் Enforcement Directorate அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
பினராயி விஜயன் முதல்வராக இருந்த 2018-19 காலகட்டத்தில், Cochin Minerals நிறுவனம், அவரது மகள் வீணாவுக்கு சொந்தமான Exalogic Solutions நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி தொகையை சட்டவிரோதமாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொச்சின் மினரல்ஸ் நிறுவனத்திற்கு எந்தவித சேவையும் வழங்கப்படாத நிலையிலும் இந்த பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2024ஆம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக, திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் வீடு உட்பட கேரள மாநிலம் முழுவதும் மொத்தம் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
