பாகிஸ்தான் அரசியல்வாதிகளிடம் இருந்து நிதி பெறும் கரப்பான் கும்பல்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
பெங்களூரு: இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுப்பதற்காகச் சில அரசியல் குழுக்கள் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதியுதவி பெறுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றம்சாட்டியுள்ளார். கரப்பான் கும்பல் என்று குறிப்பிடப்படும் குழுவினர் இந்தியாவுக்கு எதிரான அமைப்புகளிடமிருந்து வெளிநாட்டு நிதியைப் பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அபிஜீத் திப்கே மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் பாகிஸ்தான் அரசியல்வாதிகளிடம் இருந்து நிதி பெறுவதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறினார்.
மேலும், இந்தியாவுக்கு எதிரான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், தவறான பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக கரப்பான் கும்பலுக்கு நிதியுதவி அளித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பரப்பி வரும் தவறான பிரசாரங்களை முறியடிப்பதற்காகவே இந்த விவரங்கள் பொதுவெளியில் கொண்டு வரப்படுவதாகவும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
தேர்தலில் வெற்றி பெற முடியாத சில குழுக்கள், மக்களைத் தூண்டிவிட்டு வீதிகளில் இறங்கி அரசியல் போராட்டங்களை நடத்த முயற்சிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
