நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்ற பெண்கள் நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா, சிலி அணியை 6-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் முன்னேறியது. அந்த ஆட்டத்தில் நவ்னீத் கவுர் மற்றும் தீபிகா ஷெராவத் தலா இரண்டு கோல்கள் அடித்தனர். நேஹா மற்றும் ருதுஜா தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணியின் கேப்டன் சலிமா ஆட்டநாயகி விருதை வென்றார்.
மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-1 என்ற கணக்கில் வீழ்த்திய நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா, நியூசிலாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
