திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில், சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கக் கூடாது என்று மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தனது நிலைப்பாட்டை வரும் 22-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நிறுவப்பட்டதாகக் கூறப்படும் சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று சில அமைப்புகள் வலியுறுத்தி வருவதாகவும், இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறிய அவர், திருப்பரங்குன்றம் பிரச்னையில் தமிழக அரசு இதுவரை கடைப்பிடித்து வந்த நிலைப்பாட்டை எதிர்காலத்திலும் உறுதியாக தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்குவது தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால், அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் மு. வீரபாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
