சென்னை: இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய தமிழக வீரரான முருகன் அஸ்வின் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சுழற்பந்து வீச்சாளரான முருகன் அஸ்வின், 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் மூலம் கவனம் பெற்றார். அதன் பிறகு புணே, மும்பை, தில்லி, பெங்களூரு, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல அணிகளுக்காக விளையாடினார்.
35 வயதான முருகன் அஸ்வின், ஐபிஎல் தொடரில் இதுவரை 44 போட்டிகளில் விளையாடி 35 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி டிராபி தொடர்களிலும் தொடர்ந்து விளையாடி வந்தார்.
டி20 கிரிக்கெட்டில் 117 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், மொத்தம் 115 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழ்நாடு, சண்டீகர் மற்றும் ஜம்மு – காஷ்மீர் அணிகளுக்காக முருகன் அஸ்வின் விளையாடியுள்ளார்.
